நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 23 June 2023

நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்.


திருப்பத்தூரில் நடிகர் விஜய்யின் 49வது பிறந்தநாளை  முன்னிட்டு அரசு மருத்துவமனையில்  பிறந்த  குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர். 

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று நடிகர் விஜய்யின் 49வது  பிறந்தநாளை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில்  இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் பரிசுகள் பெட்டகம் வழங்கும் விழா விஜய் மக்கள் இயக்கம் மாவட்ட இளைஞரணி தலைவர்  நவீன் குமார் தலைமையில் நடைபெற்றது. 


இதனை தொடர்ந்து இன்று பிறந்த 11க்கும மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம் விஜய் மக்கள் இயக்கத்தினர் அணிவித்தனர். இவ்விழாவில் மருத்துவ இணை இயக்குனர் மாரிமுத்து, திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவர் சிவக்குமார், விஜய் மக்கள் இயக்கத்தின் நகர,  ஒன்றிய நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/