தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தி அதிகரிக்கவும் விவசாயிகள் தங்கள் விலைப் பொருட்களுக்கு நல்ல விலை பெறுவதற்கும் தமிழக அரசு அனைத்து விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் தென்னை சாகுபடி அதிக அளவில் செய்யப்பட்டு வருகிறது தேங்காயின் விலை குறையும்போது விவசாயிகள் அவற்றை மதிப்பு கூட்டி கொப்பரை தேங்காய் விற்பனை செய்கின்றனர்.


மேலும் கொப்பரைகளின் விலை குறைந்தபட்ச ஆதரவு விலையை விட குறைவாக உள்ளது எனவே விலைகளின் ஏற்ற இறக்கங்களில் இருந்து விவசாயிகளை பாதுகாத்திட கொப்பரை தேங்காய் களுக்கு நல்ல விலை கிடைத்திட 2023 ஆம் ஆண்டு விலை ஆதரவு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரவை கொப்பரைக்கு கிலோ ஒன்றுக்கு 108.60 ரூபாய் விலை கொடுத்து கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது அதன்படி திருப்பத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 15 மெட்ரிக் டன்னும் வாணியம்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 10 மெட்ரிக் கண்ணும் கொள்முதல் செய்யப்பட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்ல தம்பி மற்றும் வேளாண்மை அலுவலர் லதா மற்றும் வேளாண்மை துணை அலுவலர் வேளாண் வணிகம் சிவகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர் .
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment