திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்ட காவல்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அமலாக்க பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி குழுவினர் மற்றும் மத்திய புலனாய்வு குழுவினரும் இணைந்து நேற்று 10.06.2023 அன்று ஆம்பூர் தற்காலிக பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் பிரசாத்மாஜி வயது-37 என்ற நபரை பிடித்து சோதனை செய்ததில் சட்டவிரோதமாக விற்பனைக்காக ஒரிசாவில் இருந்து ஈரோட்டிற்கு கடத்தி வரப்பட்ட 7 கிலோ கஞ்சவை பறிமுதல் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- ஆம்பூர் தாலுக்கா செய்தியாளர் கௌதம் கார்த்திக்



No comments:
Post a Comment