திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் வட்டாரத்திற்குட்பட்ட வாணியம்பாடி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ஆலங்காயம் சமுதாய சுகாதார நிலையத்தில் 14 முதல் 17 வயது வரை பள்ளி செல்லா இளம் வயதினருக்கு ஹீமோகுளோபினோபதி பரிசோதனை முகாம் மருத்துவ அலுவலர் மரு. ச. பசுபதி தலைமையில் நடைபெற்றது.


முகாமில் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் செந்தில் கலந்து கொண்டு இளம் வயதினருக்கு ஹீமோகுளோபின் அளவு குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகை நோய் பற்றியும், அதனை தடுக்க தினசரி உணவில் போதுமான இரும்பு சத்து விட்டமின்கள் எவ்வாறு பெறுவது பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
உடன் Tribal MMU மருத்துவர்.திருப்பதி, மரு. தேன்மொழி, RBSK மரு.விக்னேஷ் MBBS., மற்றும் அனைத்து சுகாதார பணியாளர்கள் உடன் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment