திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டகுழக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 June 2023

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட திட்டகுழக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஏழாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட திட்டக்குழு கூட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கடந்த தினங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட நான்கு நகராட்சி மூன்று பேரூராட்சி மூன்று பேரூராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது இதில் இதில் போட்டியிட்ட 4 திமுக உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர்.


முன்னதாக கிராமப்புற தேர்தலில்  போட்டியின்றி 8 பேர் திமுக உறுப்பினர்கள் தேர்வு  செய்யப்பட்ட நிலையில் பன்னிரண்டு பேர் கொண்ட திட்டக்குழு திட்ட குழு உறுப்பினர்களுக்கான வெற்றி பெற்றதற்கான  சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.


இந்த நிலையில் திட்ட குழு உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொண்டு இன்று முதல் திட்ட குழு கூட்டம் நடைபெற்றது, இதில் சசிகலா, பிரியதர்ஷினி, சத்தியவாணி, முனிவேல், ஜெயா, சுபாஷ் சந்திர போஸ், சுப்பிரமணி, குணசேகரன், குப்பம்மாள்,நிஹாத்அகமத் மோகன்ராஜ், ஸ்ரீதர் உள்ளிட்ட 12 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 


மேலும் இந்த கூட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற ஊராட்சிகளுக்கு தேவையான திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மாவட்ட குழு தலைவர் சூரியகுமார், மாவட்ட ஆட்சியர் வருவாய் அலுவலர் வளர்மதி, திட்ட இயக்குனர் செல்வராசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/