திருப்பத்தூரில் காயிதே மில்லத் பிறந்தநாள் விழா மற்றும் காயிதே மில்லத் விருது வழங்கும் விழா. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 6 June 2023

திருப்பத்தூரில் காயிதே மில்லத் பிறந்தநாள் விழா மற்றும் காயிதே மில்லத் விருது வழங்கும் விழா.


திருப்பத்தூர் மாவட்டம் கோட்டை தெரு, ஜின்னா ரோடு காயிதே மில்லத் கல்வி அறக்கட்டளை இன் சார்பில்  காயிதே மில்லத் விருது வழங்கும் விழா மற்றும் காயிதே மில்லத் பிறந்தநாள் விழா  அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் ஜூபேர் அகமத் தலைமையில் நடைபெற்றது.  


இவ்விழாவில் பல்வேறு கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் தொழிலதிபர்கள் என திரளாக பங்கேற்றனர். ஏழை மாணவர்களுக்கு படிப்பு செலவிற்காக பத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு காசோலை வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு காயிதே மில்லத் விருது வழங்கப்பட்டது.  இதில் சிறப்பு அழைப்பாளராக ஓட்டல் சங்க மாநிலத் தலைவர் வெங்கட்ட சுப்பு, இந்திய முஸ்லிம் லீக் தேசிய இணை புதுச் செயலாளர் அப்துல் பாசித், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  நவாஸ் கனி ஆகியோர் விருதுகளை வழங்கினர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/