மேலும் இந்த சம்பவம் குறித்து ரயில்வே பாதுகாப்பு படை டிவிஷன் செக்யூரிட்டி கமிஷனர் சவ்ரோகுமார், இரயில்வே இருப்புப் பாதை டிஎஸ்பி பெரியசாமி, திருப்பத்தூர் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் போலீசார் கோகுல் என்ற இளைஞர்களின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும் முதல் கட்ட விசாரணையில் கோகுல் சிக்னல் உடைப்பிருக்கும் தனக்கும் சம்பந்தமில்லை ரயில்வே தண்டவாளத்தில் சும்மாதான் அமர்ந்திருந்தேன் என ரயில்வே போலீஸ் யாரிடம் தெரிவித்து வருவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சிக்னல் கோளாறு காரணமாக ஒடிசாவில் ரயில் விபத்து மற்றும் திருச்சியில் மாவட்டம் சமயபுரம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் டயர் வைக்கப்பட்ட சம்பவம்
மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ரயில்வே நிலையத்தில் சிக்னல் உடைப்பு உள்ளிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சேலம் கோட்டம் ரயில்வே பாதுகாப்பு படை கிரைம் டாக் ப்ரூஸ் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:
Post a Comment