மதுவிலக்கு சோதனை கிராம விழிப்புணர்வு கூட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 June 2023

மதுவிலக்கு சோதனை கிராம விழிப்புணர்வு கூட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம் கிரமிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதூர் நாடு மலை பகுதியில் உள்ள  சேம்பரை கிராமத்தில் இன்று 03.05.2023 அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்., IPS. தலைமையில் மதுவிலக்கு சோதனை மற்றும் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிராமத்திற்கு வரும் அந்நிய சந்தேக நபர்கள் பற்றியும் கிராமத்தில் நடைபெறும் குற்றச் செயல்கள் குறித்தும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், சட்ட விரோத செயல்களான சாராயம் காய்ச்சுதல், கடத்துதல், மற்றும் விற்கும்  தொழிலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர் எனவும் மேலும் இக்கூட்டத்தில் திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக்.


No comments:

Post a Comment

Post Top Ad

*/