திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையத்தில் இன்று சர்வதேச யோகா தினம் வட்டார மருத்துவ அலுவலர் மரு. ச. பசுபதி தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக யோகா பயிற்சியாளர் வெங்கடாசலம் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி அளித்தனர்.


மேலும் தினமும் யோகா செய்வதினால் உடலையும், மனதையும் பாசிட்டிவாக வைத்துக் கொள்ள உதவும் என அதன் நன்மைகளை எடுத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியில் சுகாதார பணியாளர்கள், புறநோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இறுதியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணகுமார் நன்றியுரை கூறினார்.
No comments:
Post a Comment