ஆம்பூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 June 2023

ஆம்பூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர் கைது.


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் தேவிகாபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் செல்போன் பரிப்பில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய போலீசார் அங்கிருந்து பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் பாலாற்றங்கரை பகுதியில் சுற்றித்திரிந்த இளைஞரை மடக்கி பிடித்து அவன் வைத்திருந்த ட்ராவல் பேக்கை போலீசார் சோதனை மேற்கொண்டனர். 


அப்போது அவன் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் பணம் இருந்துள்ளது. இதனையடுத்து அவனை கைது செய்த போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்  ஆம்பூர் மாங்காதோப்பு பகுதியை சேர்ந்த முபாரக் (28) என்பதும் இவர் பேரனாம்பட்டு மற்றும் வாணியம்பாடி பகுதிகளில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் வாங்கி வந்து ஆம்பூர் மற்றும் மாதனூர் பகுதிகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது  சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய மற்றும் உமராபாத் காவல் துறையினர் இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- ஆம்பூர் தாலுகா செய்தியாளர் கௌதம் கார்த்திக் 

No comments:

Post a Comment

Post Top Ad

*/