திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி மேற்கு ஒன்றியம், சொர்க்காயல்நத்தம், பச்சூர் பகுதிகளில் புதியதாக அமைக்கப்பட்ட மின்மாற்றிகளை ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி பூஜை செய்து நேற்று மாலை தொடங்கிவைத்தார்.


இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் பாஷா முகமது, நாட்றம்பள்ளி ஒன்றிய குழுத் தலைவர் வெண்மதி சிங்காரவேலன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆனந்தன், சுதா சௌந்தர்ராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நந்தினி பூபாலன், தேசிங்கு ராஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment