திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஊராட்சி ஒன்றியம் ஆதியூர் ஒய்.டி.கே திருமண மண்டபத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான நடைபெற்ற விளையாட்டு போட்டிகள் கடந்த பிப்ரவரி மாதம் நடத்தியதில் வெற்றிப்பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த 1,617 வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள், பதக்கங்கள், மற்றும் ரூ.32.67 இலட்சம் மதிப்பில் பரிசுத்தொகைகளை பாஸ்கரபாண்டியன் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.நல்லதம்பி முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்கள்.


உடன் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் சேதுராஜன், முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உள்ளனர்.
No comments:
Post a Comment