தமிழ்நாடு முழுவதும் இன்று மாமன்னன் திரைப்படம் இன்று திரையிடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக திருப்பத்தூர் மாவட்ட உதயநிதி ரசிகர் மன்ற பொறுப்பாளர் தமிழ்மணி தலைமையில் பொதுமக்கள் மற்றும் இளைஞரணியினர் இலவசமாக படம் பார்க்க ஏற்பாடு செய்திருந்தனர்.


இந்த படம் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி கீர்த்தி சுரேஷ் நடித்த படம் திருப்பத்தூரில் இரண்டு தியேட்டரில் திரையிடப்பட்டுள்ளது. சுமார் 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் இந்த திரைப்படத்தை கண்டு களித்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் ராஜேந்திரன், நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வடிவேல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்துக்கொன்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment