திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி இந்திரா நகர். சக்தி நகர், உள்ளிட்ட பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திமுக ஊழல் அரசை கண்டித்து நகர தலைவர் சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
தேர்தல் அறிக்கையின் வாக்குறுதிகளை நிறைவேற்று, நகரம் தோறும் பராமரிப்பு இல்லாமல் சேதமடைந்துள்ள சாலைகள் கழிவு நீர் கால்வாய் இல்லை சீர்படுத்திடு, மின் கம்பங்களை முறையாக பராமரித்து அனைத்து மின்விளக்குகளையும் சீரமைத்திடு மின் வெட்டை தடுத்திடு மின் கட்டணத்தை குறைத்திடு, டாஸ்மார்க் கடைகளை மூடு, கஞ்சா கள்ளச்சாராயம், விற்பனை அறவே ஒழித்திடு உணவுப்பொருள் பொருள்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களை தடுக்காதே, மத்திய மாநில அரசு திட்டங்களில் ஊழல் செய்யாதே, பள்ளி கல்லூரிகளின் ஆசிரியர்கள் பணியிட ங்களை நிரப்பிடு, ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை மேம்படுத்து உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment