தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகம், திருப்பத்தூர் மின் பகிர்மான வட்டம், திருப்பத்தூர் கோட்டத்தில் நடைபெற்று வரும் மின் இணைப்பு பெயர் மாற்றம் சிறப்பு முகாமில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பெயர் மாற்றம் செய்து கொண்ட பயனாளிகளுக்கு மின் இணைப்பு பெயர் மாற்ற சான்றிதழ்கள் வழங்கி சிறப்பித்தார்கள்.
இம்முகாமில் திருப்பத்தூர் கோட்ட செயற் பொறியாளர் பொறி.G.அருள்பாண்டியன் தலைமை தாங்கினார். உதவி செயற்பொறியாளர்கள் பொறி.V.பிரபு, வடக்கு திருப்பத்தூர், பொறி.M.கண்ணன், மேற்கு/திருப்பத்தூர், உதவி பொறியாளர்கள், மின் வாரிய பணியாளர்கள் இம்முகாமில் திமுகவின் கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் கே ஏ குணசேகரன் மற்றும் திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி விஜியா அருணாச்சலம், உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment