திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. அதை தடுக்கும் பொருட்டு மாவட்ட கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருப்பத்தூர் மாவட்ட இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்கத்தின் சார்பில் தலை கவச விழிப்புணர்வு பேரணி- நடைப்பெற்றது.
இந்த பேரணியை ஆய்வாளர் சிவானி துவங்கி வைத்தார். இந்த பேரணியில் தலைவர் மணவாளன், துணை தலைவர் குபேந்திரன், செயலாளர். அன்பு, திருப்பதி, சீனிவாசன், சங்கர், பொருளாளர் மூர்த்தி, சரவணன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த பேரணியில் 200 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகன பழுது பார்ப்போர் கலந்துக்கொண்டனர்.
இந்த பேரணி திருப்பத்தூர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியபத்தில் துவங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிந்தது. இதில் காவல் துறை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment