ஆசியக்கோப்பை ஹாக்கிப் போட்டிகள் சென்னையில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. மாநிலம் முழுவதும் வலம் வரவுள்ள வெற்றிக்கோப்பை இன்று திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு மைதானத்திற்கு வந்தது.
அதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு டி.பாஸ்கர் பாண்டியன் அவர்கள் தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி வெற்றி கோப்பையின் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், திருப்பத்தூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் க.உமாகன்ரங்கம், ஜோலார்பேட்டை நகர மன்ற துணைத்தலைவர் இந்திரா பெரியார்தாசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment