திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட காக்கங்கரை ஊராட்சியில் செயல்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை, இங்கு பணிபுரியும் செவிலியர்களுக்கு அரசாங்கத்திலிருந்து கொடுக்கப்படும் ஊதியம் பற்றாக்குறையின் காரணமாக பிரசவத்திற்கு வரும் கர்ப்பிணி பெண்களின் உறவினர்களிடம் அங்கு பிரசவம் பார்க்கும் செவிலியர் சிந்து என்பவர் ரூபாய் 2000 விதம் அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டு வருகின்றனர்.
அங்கு வரும் உறவினரிடம் சோப்பு கழிப்பறைக்கு தேவைப்படும் அனைத்து வகையான பொருட்களையும் அவர்களை வாங்கி வர சொல்லி வற்புறுத்துகின்றனர், அது மட்டுமல்லாமல் நோயாளிகளின் வருகை பதிவிடு செய்வதற்காக நோட்டு பேனா பென்சில் ஆகியவற்றை வாங்கி வரச் சொல்லி கர்ப்பிணி தாய்மார்களே வற்புறுத்துகின்றனர், இதனால் அங்கு வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் வெகு சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர், அது மட்டுமல்லாமல் இங்கு இரவு நேரங்களில் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் வெளியில் காக்காவைத்து மற்றும் ஒருமையில் திட்டியும் பேசியும் அவர்களை அனுப்பி விடுகின்றனர் அவர்களுக்கு தகுந்த தேவையான மருத்துவ வசதி அளிக்காமல் உள்ளனர்.
இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர், அது மட்டுமல்லாமல் ஆரம்ப சுகாதார நிலையத்தின் மேற்குறை இடிந்து விழுந்தும் இன்னும் சரி செய்யாமல் ஆறு மாதம் காலம் ஆகியும் அப்படியே இருக்கிறது, நம் நிருபர்கள் மருத்துவர் கீர்த்தனா அவர்களை கேட்டதற்கு, இதற்கான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது என்றும் அலட்சியப் போக்கில் பதிலளிக்கிறார், அதுமட்டுமில்லாமல் இவர் பணி நேரத்தில் குறிப்பிட்ட நேரத்துக்கு பணிக்கு வருவதும் இல்லை இரண்டு அல்லது மூன்று மணிக்கு சென்று விடுகிறார்.
அங்கு அரசு விடுமுறை நாட்களில் பணிபுரியும் செவிலியர்கள் யாரும் பணிக்கு வருவதில்லை, இவர்களுக்கு பதிலாக அங்கு துணை சுகாதார நிலையத்தில் பணிபுரியும் MLHP அவர்களை பணி செய்ய அனுமதிக்கின்றனர், மற்றும் செவிலியர்கள் பணிக்கு வராத காரணத்தால் இவர்களை வைத்து, நோயாளிகளுக்கு வைத்தியம் பார்த்து வருகின்றனர், பிற்காலத்தில் ஏதேனும் விபரீதம் ஏற்பட்டால் அதற்கு யார் பதில் அளிப்பார், அது மட்டுமல்லாமல் பாதுகாப்பற்ற முறையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தும் மற்றும் ஏற்கனவே ஒருமுறை இங்கு தங்கி இருக்கும் செவிலியர்களின் குடியிருப்புகளில் பணம் போன்றவை திருடப்பட்டு உள்ளது அங்கு தகுந்த பாதுகாப்பு இல்லாத காரணமே இதற்கு கருதப்படுகிறது, இதைக் கண்டுகொள்வாரா திருப்பத்தூர் மாவட்ட சுகாதார துறை இயக்குனர்?
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment