திருப்பத்தூர் அருகே கிராம சுகாதார செவிலியர்களுக்கான தத்தெடுத்தல் விதிமுறைகள் 2022 மற்றும் சட்டத்திற்கு புறம்பான தத்தெடுத்தல் குறித்து ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 16 July 2023

திருப்பத்தூர் அருகே கிராம சுகாதார செவிலியர்களுக்கான தத்தெடுத்தல் விதிமுறைகள் 2022 மற்றும் சட்டத்திற்கு புறம்பான தத்தெடுத்தல் குறித்து ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பாச்சல் பகுதியில் இயங்கி வரும் SRDPS  தொண்டு நிறுவனத்தில் சமூக பாதுகாப்பு துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை இணைந்து கிராம சுகாதார செவிலியர்களுக்கான தத்தெடுத்தல் விதிமுறைகள் 2022 மற்றும் சட்டத்திற்கு புறம்பான தத்தெடுத்தலை தடுத்தல் குறித்த ஒரு நாள் திறன் வளர்ப்பு பயிற்சி பட்டறை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது, மேலும் இந்த நிகழ்ச்சிக்கு SRDPS தொண்டு நிறுவன இயக்குனர் தமிழரசி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமாவளவன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் செந்தில், என பலரும் இதில் கலந்து கொண்டனர்


மேலும் இந்த நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சி தலைவர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பேசுகையில் சட்டப்படி முறையாக குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் எனவும் மேலும் சட்டப்படி குழந்தைகளை தத்தெடுக்கவில்லை என்றால் அந்த குழந்தைகள் பல்வேறு சமூக பிரச்சனைகளை சந்திப்பதாகவும் பல்வேறு இன்னல்களுக்கு குழந்தைகள் தள்ளப்படுவதாகவும் எனவே குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை கருத்தில் கொண்டு சட்டப்படி முறையாக குழந்தைகளை தத்தெடுக்க வேண்டும் என பல்வேறு அறிவுரைகள் வழங்கி பேசினார்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/