இந்த நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிரமணி, கந்திலி ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் மூர்த்தி ஊராட்சி மன்றதலைவர் மணிமாறன் துணைதலைவர் அண்ணாமலை, சிவராஜ் சத்துணவு ஊழியர்கள் முபீனா அருள் மொழி தற்காலிக ஆசிரியை சரளா மற்றும் தன்னார்வலர் சிவராசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். ஊராட்சி மன்றதலைவர் மாணவர்கள் அனைவருக்கும் ஊராட்சி மன்றத்தின் சார்பாக ஸ்நாக்ஸ் டப்பா பரிசாக வழங்கினார்.
தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் இந்திரா தக்காளி விலை அதிகமாகி உள்ளதால் அதற்கான விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் அனைத்து பாக்ஸிலும் ஒரு மாணவருக்கு 100கிராம் தக்காளி, லட்டு,சாக்லேட் ஆகியவை வழங்கப்பட்டது. தலைமை ஆசிரியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சத்துணவு மூலமாக இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு பேச்சு போட்டி கவிதை விளையாட்டுபோட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு விழா சிறப்பாக நடைப்பெற்றது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment