திருப்பத்தூர் நகராட்சி கோட்டை கோயில் தெரு பகுதியில் உள்ள அருள்மிகு கோட்டை கஜேந்திர வரதராஜப் பெருமாள் திருக்கோயில் வளாகத்தில் இன்று திருப்பத்தூர் மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு விழா மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக சந்திரசேகரன் என்பவர் பதவி ஏற்றுக்கொண்டார். இதில் ஜோலார்பேட்டை எம்எல்ஏ தேவராஜ், திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி, மாவட்ட ஆவின் தலைவர் எஸ் ராஜேந்திரன், திருப்பத்தூர் நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ரமணி மற்றும் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மோகன்ராஜ், சுகந்தி, கணேசன், வெங்கடேசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆளும் கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment