திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 25 July 2023

திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர் கூட்டம் நடைபெற்றது.


திருப்பத்தூர் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிக்குட்பட்ட 36 வார்டுகளின் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் தலைமையில்  கவுன்சிலர் கூட்டம்  நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள்  தங்கள் பகுதிக்கு உட்பட்ட நிறைகள் குறைகள் பற்றி கூறினர்.

மேலும் தற்போது மிகவும் சீர்கெட்டு குப்பை கூடாரமாக மாறி வருகிறது. மேலும் திருப்பத்தூர் நகர பகுதிகளில் நாய் மற்றும் பன்றிகளின் தொல்லை அதிகமாக உள்ளது. என குற்றச்சாட்டினர் மேலும் குப்பைகளை அப்புறப்படுத்தி தூய்மை நகரமாக மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.


இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு அரசு அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/