திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா பச்சூர் அடுத்த செத்தமலை வட்டம் பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருப்பத்தூர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் செத்தமலை பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம், பெருமாள், கண்ணன், பார்த்திபன் மற்றும் அவரது குடும்ப பெண்கள் என சேர்ந்து அந்த ஊரில் உள்ள பலருடைய நிலத்தை ஏமாற்றி 60 ஏக்கர் நிலத்தை வைத்துள்ளதாகவும் நியாயத்தை கேட்டபோது பயங்கர ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.


அந்த ஊரில் படித்த சிலர் வெளியூரில் வேலை செய்வதால் இந்த பிரச்சனையை யாரும் தீர்க்க வில்லை. பலரிடம் ஏமாற்றி வாங்கிய நிலத்தை மீட்டு தரவேண்டுகிறோம் என மனு அளித்தனர். மனு அளிக்க 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment