திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நீதிமன்றத்தின் முன்பு திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்க சார்பாக திருப்பத்தூர் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஞானமோகன் தலைமையில் நீதிமன்றங்களில் அம்பேத்கர் படத்தை நீக்க வேண்டும் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பி இருப்பதைக் கண்டித்தும் அனைத்து நீதிமன்றங்களிலும் புகைப்படத்தை நிறுவ வேண்டும் எனக் கூறி 30க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கண்டன திருப்பத்தூர் வழக்கறிஞர் சங்க துணை தலைவர் பால மணவாளன், செயலாளர் முத்தமிழ்செல்வி மற்றும் வழக்கறிஞர்கள் சாமி, பழனி, மணி, ஆனந்தன், கிருஷ்ணன், அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment