திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி தலை குனிய வைத்த மணிப்பூர் மாநில அரசையும் பாஜக அரசையும் கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் மாவட்ட கழக துணை செயலாளர் சாந்தி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக அரசை கண்டித்து பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது, இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருப்பத்தூர் திமுக மாவட்ட கழக செயலாளர் தேவராஜ்., MLA மற்றும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன், முத்தமிழ் செல்வி, திருப்பத்தூர் நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், திமுக முக்கிய நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment