திருப்பத்தூர் அடுத்த காக்கங்கரை ஊராட்சியில் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் சார்பாக மாங்குப்பம், கந்திலி மலை, மோட்டூர், வதனவாடி, நர்சம்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 2000 விதை பைகள் நட்டனர் மற்றும் காக்கங்கரை பேருந்து நிலையத்தில் பாமக ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து பட்டாசுகள் வெடித்தும் கேக்குகள் வெட்டியும் இனிப்புகளை வழங்கியும் பாமக நிறுவனர் மரு. ராமதாஸ் அவர்கள் பிறந்தநாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் டி.கே.ஆர்.ராஜா மற்றும் மாவட்ட செயலாளர் ஏ, பி,சிவா, கந்திலி மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் அசோக்குமார், மற்றும் முக்கிய நிர்வாகிகள் அகத்தியன், செந்தில், அரவிந்தன், பிரதாப், சுபாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment