கந்திலியில் பாமகவினர் சாலை மறியல் போராட்டம். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 28 July 2023

கந்திலியில் பாமகவினர் சாலை மறியல் போராட்டம்.


திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், காக்கங்கரை பேருந்து நிலையத்தில் என்,எல்,சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் அவர்களை கைது செய்ததை கண்டித்த ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும், திருப்பத்தூர் மேற்கு மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி,  பா.ம.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள். சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் சற்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது சிறிது நேரம்  இதனால் அங்கு விரைந்து வந்த கந்திலி காவல் நிலைய காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து கெஜல்நாயக்கன் பட்டியில்  உள்ள வள்ளி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/