இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பள்ளி தலைமை ஆசிரியர் குழந்தைசாமி அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்பிராயன், மற்றும் கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர், ஆசிரியைகள் மாணவ, மாணவிகள் என 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில் கலந்துக்கொண்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். அதனை தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். இதில் மாவட்ட ஆட்சியர் பேசுகையில் அகத்தின் அழகு முகத்தில் தெரியும். நாம் அனைவரும் இயற்கையை பாதுகாக்கனும். இயற்கையை பாதுகாதாதால் தான் அனைவரும் நலமுடன் வாழ முடியும்.
யானை தொடர்ந்து 18 மணி நேரம் உணவு இன்னும். அதே போன்று பறவைகள் பழங்கள் தின்று கொட்டைகளை ஆங்காங்கே போடுவதால் மரங்கள் வளர்கிறது. மரங்கள் இருப்பதால் தான் மழை பொழிகிறது. நாம் ஏன் குறுங்காடுகள் அமைக்கிறோம். காடுகள் வளர்ப்பதால் நமக்கு நன்மையே. நமக்கு பெரிய எதிரி நெகிழி தான். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியால் மனித இனத்திற்கு மிகப்பெரிய தீங்கு. நெகிழியை எரிப்பதால் டயாக்சின் என்ற வாயு வெளியேறுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் என்றார்.
நாம் சிறுதானியத்தை மறந்து விட்டோம். அதிக அளவில் சிறுதானியத்தை எடுத்துக்கொள்ளவேண்டும். முளைகட்டிய தானியத்தை தினமும் எடுத்துக்கொள்ளவேண்டும். நாம் இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். பயிர்களுக்கு பூச்சி மருந்து அடிப்பதால் அந்த உணவும் விசமாகிறது என்றார். நன்றாக படியுங்கள் ஒருவர் கல்வியால் மட்டுமே உயர முடியும் என்றார்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment