இந்நிலையில் கடந்த 05.09.2023 அன்று நள்ளிரவு இனியவள் வீட்டில் தனியாக இருந்தபோது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இனியவள் வீட்டின் மீது நாட்டு வெடி வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர் உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான காவல்துறையினர் நாட்டு வெடி வீசியது குறித்து வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்ததில் சென்னை வானகரம் பகுதியை சேர்ந்த இனியவளின் மருமகன் ஜெகதீசன் என்பவர் 1கோடி ரூபாய் மேல் கடன் பெற்று கொண்டு திருப்பி தர மறுத்து சென்னையில் இருந்து வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்து மாமியார் வீட்டில் தங்கியிருந்துள்ளார், இந்நிலையில் ஜெகதீசனுக்கு கடன் கொடுத்த சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த பாலாஜி,தாம்பரம் பகுதியை சேர்ந்த சுப்புராஜ் மற்றும் ரங்கராஜ் ஆகியோர் ஜெகதீசனை சென்னையில் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காத நிலையில், ஜெகதீசன் வாணியம்பாடியில் உள்ள அவரது மாமியார் வீட்டில் இருப்பதை அறிந்த மூவரும் இருசக்கர வாகனத்தில் வந்து வாணியம்பாடி மேட்டுப்பாளையம் பகுதியில் இனியவள் வீட்டு மீது நாட்டு வெடி வீசிவிட்டு தப்பிசென்றது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து பாலாஜி மற்றும் சுப்புராஜ் ஆகியோரை கைது செய்த காவல்துறையினர் அவர்களை வாணியம்பாடி கிராமிய நிலையத்திற்கு அழைத்து வந்து அவர்களிடம் மேலும் விசாரணை மேற்க்கொண்டு தலைமறைவாக உள்ள ரங்கராஜை காவல்துறையினர் தேடி வருகின்றனர்..
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment