ஜோலார்பேட்டை தனியார் பள்ளியில் பேருந்து அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார். - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 14 September 2023

ஜோலார்பேட்டை தனியார் பள்ளியில் பேருந்து அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் துவங்கி வைத்தார்.


ஜோலார்பேட்டை தனியார் பள்ளியில் பேருந்து அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர்  துவங்கி வைத்தார்- முதல் முறையாக இஸ்ரோ பேருந்து அறிவியல் கண்காட்சியை மாணவ, மாணவிகள் காண ஏற்பாடு.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தனியார் பள்ளியில் இஸ்ரோவின் பேருந்து சிறப்பு அறிவியல் கண்காட்சி இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் துவங்கி வைத்தார். 


இந்த பேருந்து அறிவியல் கண் காட்சியானது மாணவர்களிடையே  ஊக்கத்தை அளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்கள் விஞ்ஞானிகள் ஆவதற்காகவும், அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெங்களூர் இஸ்ரோ மாணவ மாணவிகள் காண்பதற்காக முதல் முறையாக இந்த பேருந்து அறிவியல் கண்காட்சியை ஏற்பாடு செய்திருக்கிறது. அதன் முதற்கட்டமாக ஜோலார்பேட்டை தனியார் பள்ளியில் துவங்கியது. 


இன்றும் நாளையும்  அறிவியல் கண்காட்சி நடைபெற இருக்கிறது.   இதில் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பெங்களூரில் உள்ள இஸ்ரோவில் இருந்து இந்த பேருந்து சிறப்பு அறிவியல் கண்காட்சியை இஸ்ரோ விஞ்ஞானி  ஸ்ரீனிவாசா  ஏற்பாடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/