திருப்பத்தூர் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் - கீரின் இனிசியேடிவ் பனை நடவு 2023'- 40 ஆயிரம் பனை விதை நட்டு சாதனை. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 23 September 2023

திருப்பத்தூர் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் - கீரின் இனிசியேடிவ் பனை நடவு 2023'- 40 ஆயிரம் பனை விதை நட்டு சாதனை.


திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில், கடந்த 2019ல் ஏற்படுத்தப்பட்ட "கீரின் இனிசியேடிவ்" இயக்கம் திருப்பத்தூர் மாவட்டக் கிராமப்புறங்களில் மற்றும் ஏரிகளில் 4 வருடங்களில் ஒரு லட்சம் பனைவிதைள் நடவு என்ற இலக்கோடு துவங்கப்பட்டது, 2019ம் ஆண்டில் 25,700 பனை விதைகள் ஏரி கரையில் நடப்பட்டன. 

இந்த இயக்கத்தின் சார்பாக மாணவர்கள் கிராமபுற பஞ்சாயத்துகளின் உதவியால் பனை விதை சேகரித்து, திருப்பத்தூரில் உள்ள ஏரி கரைகளில் நடவு செய்தனர். 40,000 பனை விதைகள் என்ற இலக்கோடு, மாணவர்கள் கிராமபுரத்து மக்கள் மற்றும் பஞ்சாயத்து உதவியோடு 40,000க்கு விதைகள் சேகரித்துள்ள நிலையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று அன்று விதை நடவின் துவக்கமாக 2,200 விதைகள் சோமலாபுரம் மற்றும் பொம்மிக் குப்பம் ஏரிகளில் உள்ள பஞ்சாயத்துகளோடு இனைந்து நடவு செய்யப்பட்டது. 


தொடர்ந்து தோக்கியம், சீரங்கப்பட்டி, மற்றும் கருப்பனூர் பஞ்சாயத்துகளில் உள்ள ஏரியின் முன்கரையில் பஞ்சாயதுக்கு 1000 விதைகள் நடவு செய்யப்பட்டன. 24 ஆகஸ்ட் அன்று இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் அம்பலூர் ஏரி கரையில் 7000 பனைவிதைளை நடவு செய்துள்ளனர்.


இதன் தொடர்ச்சியாக இன்று பத்தாயிரம் பனைவிதைகளை ராவுத்தம்பட்டி ஏரிக்கரையில் மாவட்ட ஆட்சியர் திரு. தெ. பாஸ்கர பாண்டியன், அவர்கள் தலைமையில்  இன்று 200 இளங்கலை மாணவர்களால் நடவு செய்யபட்டது. இந்த பசுமை முயற்சியை முன்னேடுத்துள்ள கல்லூரி நிர்வாகம், பேராசிரியர்கள், மாணவர்கள்,  திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இந்த சாதனை செய்திருக்கிறார்கள். 


இந்த நிகழ்ச்சியில் பொது நிர்வாக செயலாளர் சுப்பிரமணியன் பொருளாளர் விஜய் பெரியசாமி கல்லூரி முதல்வர் மரிய ஆண்டனி ராஜ், அது ஒரு ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை ஆனந்தன் துணைத் தலைவர் பழனிவேல் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/