திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த போஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் மகன் சதாசிவம் வயது 33 மற்றும் அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் ஐயப்பன் வயது 29 ஆக இருவரும் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் ஒன்றரை டன் ரேஷன் அரிசிகளை சேகரித்து தங்களுடைய பிக்கப் வாகனத்தில் வெளி மாநிலத்திற்கு கடத்த இருந்தனர்.
இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில். திருப்பத்தூர் நகர காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ராஜேஷ் மற்றும் காவலர் பன்னீர்செல்வம் ஆக இருவரும் திருப்பத்தூர் ஏரிக்கோடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்
அப்போது அந்த வழியாக வந்த டாட்டா ஏசி பிக்கப் வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் வெளி மாநிலத்திற்கு கடத்திருந்த ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. மேலும் டாட்டா ஏசி பிக்கப் வாகனத்தை பறிமுதல் செய்தும் ரேஷன் அரிசி கடத்தி வந்த சதாசிவம் மற்றும் ஐயப்பன் ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஒன்றை டன் ரேஷன் அரிசியை திருப்பத்தூர் வணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர், மேலும் திருப்பத்தூர் பகுதியில் இருந்து வெளி மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர். மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment