திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் புதுக்கோட்டை ஊராட்சி கோவிலூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பொது வழியை ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி என்பவர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளார் என கூறி இந்த பொது வழியை மீட்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர், திருப்பத்தூர் சப் கலெக்டர், திருப்பத்தூர் தாசில்தார், உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை நேரிலும் தபால் மூலமும் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி இன்று அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு அதிகாரிகள் நாமம் போட்டு விட்டதாக கூறி நெற்றியில் நாமம் போட்டு கோவிலூர் பகுதியில் திருப்பத்தூர் வழியாக ஜலகாம்பாறை செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூர் கிராமிய போலிசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment