திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி கந்திலி ஒன்றியம் ஆதியூர் ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் NABARD RIDF (2022-23) திட்டத்தின் கீழ் பொதுப்பணி துறையின் வாயிலாக சுமார் 2.32 கோடி மதிப்பீட்டில் 11 வகுப்பறை புதிய கட்டிடம் கட்டும் பணிக்கு திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு சார்பில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பழனி, உதவி செயற்பொறியாளர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் முனி சுப்புராயன் மற்றும் உதவியாளர் ஜெயவேலு, கந்திலி மத்திய ஒன்றிய செயலாளர் கே ஏ குணசேகரன், ஒன்றிய அவைத்தலைவர் ஜெகதீசன், துணை செயலாளர்கள் ஆசிரியர் சண்முகம், தீபா வெங்கடேசன், வழக்கறிஞர் மாது, மாவட்ட பிரதிநிதி சக்கரை, சசி, ஊராட்சி மன்ற துணை தலைவர் A P பழனிவேல், மற்றும் செந்தில், சக்திவேல், மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர் பெருமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment