திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி மற்றும் கந்திலி ஒன்றியம் கொரட்டி ஊராட்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் (2022-23) கீழ், கொரட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 30.36 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடத்தை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு கே பாஸ்கர பாண்டியன் அவர்களின் தலைமையில், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு சார்பில் அரசு சார்பில் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி முகமையின் இயக்குனர் திரு செல்வராசு, மேலும் கந்தலி கிழக்கு ஒன்றிய செயலாளர் கே எஸ் ஏ மோகன்ராஜ், கந்திலி ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் துணைத் தலைவர் ஜி மோகன் குமார், ஒன்றிய அவைத் தலைவர் ராஜா,ஒன்றிய குழு உறுப்பினர் ஹேமலதா வினோத்குமார், லட்சுமி சந்திரசேகர் மற்றும் ஒன்றிய துணை செயலாளர் தீபா வெங்கடேசன், ஊராட்சி மன்ற தலைவர் திருமதி லட்சுமி கார்த்திகேயன், பாலு மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment