திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக 24வது முறையாக நிரம்பிய ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்!. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 27 September 2023

திருப்பத்தூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக 24வது முறையாக நிரம்பிய ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்!.


தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்றாகத் ஆண்டியப்பனூர் நீரோடை தேக்கமாக திகழ்கிறது. திருப்பத்தூரில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது.கொட்டாறு மற்றும் பெரியாறு ஆறுகளுக்குக் குறுக்கே புதியதாகக் கட்டப்பட்டு 2007 ஆம் ஆண்டு ஆண்டியப்பனூரில்  டேம் 27.38 கோடி செலவில் திறக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள ஏரிகள் நிரம்பி உள்ளன. திருப்பத்தூர் மாவட்டம் ஆண்டியப்பனூர் பகுதியில் உள்ள ஆண்டியப்பனூர் அணை 8 மீட்டர் உயரம் கொண்டது. தொடர் மழை காரணமாக அணையின் மொத்த கொள்ளளவான 112.20 மில்லியன் கன அடியை எட்டி உள்ளது.

இந்த அணை மூலம் 14 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு, இதன் மூலம் 2,055 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறும். கால்வாய் மூலம் நேரடியாக 2,970 ஏக்கர் புஞ்சை நிலமும், 2055 ஏக்கர் நஞ்சை நிலமும் என மொத்தம் 5 ஆயிரத்து 25 ஏக்கர் விவசாய நிலம் பாசனம் பெறும். 


இந்த நிலையில் தற்போது 24வதுமுறையாக அணை நிரம்பி மொத்த கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்த நீர் சின்னசமுத்திரம், வெள்ளேரி, மாடப்பள்ளி ஏரி வழியாக அங்கிருந்து இரு கிளைகளாக பிரிந்து ஒரு கிளை செலந்தம்பள்ளி, கோனேரிகுப்பம், கம்பளிகுளம், முத்தம்பட்டி, ராட்சமங்கலம், பசலிகுட்டை ஏரி வழியாக சென்று பாம்பாற்றை அடைகிறது. மற்றொரு கிளை கணமந்தூர், புதுக்கோட்டை ஏரி வழியாக திருப்பத்தூர் பெரியேரி நிரம்பி அங்கிருந்து பாம்பாற்றை அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/