திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிகே ஆசிரமம் பகுதியில் உள்ள திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் முகாமில் இன்று 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு நுழைந்துள்ளதாக தோட்ட பணியாளர் திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் திருப்பத்தூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் முருகன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் சிறிது நேரம் போராடி 6 நிலமுள்ள சாரைப்பாம்பை லாபகமாக மீட்டனர், இதனை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் நேரில் வந்து பார்வையிட்டார், மேலும் லவாகமாக மீட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment