தொடர் மழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்! பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் மகிழ்ச்சி! - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 21 September 2023

தொடர் மழை காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்! பொதுமக்கள் விவசாயிகள் மற்றும் மகிழ்ச்சி!


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாப்பட்டு ஊராட்சியில் ஏலகிரி மலை தென்திசை  அடிவாரத்தில் அமைந்துள்ளது புகழ்வாய்ந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற முருகன் கோயிலும் உள்ளதால் தமிழகமெங்கும் உள்ள பல்வேறு சுற்றுலா பயணிகள் இங்கு வந்து வழிபட்டு நீர்வீழ்ச்சியில் குளித்துவிட்டு செல்வது வழக்கம் 


இந்த நீர்வீழ்ச்சி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத் தலமாகும். தற்சமயம் சில தினங்களாக பெய்த கன மழையால் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இத்தண்ணீர்  ஊத்தங்கரையில் உள்ள பாம்பாறு ஆற்றுக்கு செல்வதால் அருகே உள்ள கிராமங்களான பெருமாபட்டு, தாதவல்லி, செலந்தபள்ளி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு வெள்ள அபாயம் உள்ளது

ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஜலகாம்பாறையில் இருந்து வரும் தண்ணீரை நம்பி இருக்கின்றனர். தற்போது நீர் வரத்து தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மட்டுமின்றி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இந்த ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான கேரளா,பெங்களூர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து விட்டுச் செல்கின்றனர். இருப்பினும் உள்ளூர்வாசிகள் ஜலகம்பாறை நீர்வீழ்ச்சிக்கு படையெடுத்து வருகின்றனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.

No comments:

Post a Comment

Post Top Ad

*/