திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருப்பத்தூர் நகரம் வார்டு-7 டபேதார் முத்துசாமி தெருவில் புதிய சாலை அமைக்க களஆய்வு செய்தபோது அங்குள்ள மக்கள் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் A நல்லதம்பி அவர்களிடம் இருபுறமும் மழைநீர் கால்வாய் வேண்டி கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையினை உடனடியாக செய்து தருவதாக சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.
இந்நிகழ்வில் நகராட்சி ஆணையாளர், நகராட்சி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், நகர மன்ற தலைவர் திருமதி சங்கீதா வெங்கடேசன் நகர துணை செயலாளர் செல்வம் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என அனைவரும் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment