வட்டார கல்வி அலுவலருக்கான தேர்வு! மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார் - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 10 September 2023

வட்டார கல்வி அலுவலருக்கான தேர்வு! மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டார்


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மேரிஇமாக்குலேட் மேல்நிலைப் பள்ளி மற்றும் டோமினிசவியோ மேல்நிலைப் பள்ளியில் வட்டார கல்வி அலுவலர்களுக்கான தேர்வு இன்று நடைபெற்றது. 

மேலும் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் 651 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர், மேலும் மேரிஇமாக்குலேட் பள்ளியில் 340 பேர் தேர்வு எழுத இருந்தனர், அதில் 295 பேர் தேர்வு எழுத வந்தவர்கள் மேலும் 45 பேர் தேர்வு எழுத வரவில்லை அதேபோல் டோமினிக் சாவியோ மேல்நிலைப் பள்ளியில் 311 நபர்கள் தேர்வு எழுத இருந்தனர்.

தேர்வு எழுத வந்த நபர்கள் 265, தேர்வு எழுத வராதவர்கள் 46 நபர்கள் அதேபோல் மாற்று திறனாளிகள் ஆறு பேர் தேர்வு எழுத இருந்தனர், நான்கு பேர் வந்த நிலையில் இரண்டு பேர் வரவில்லை. இந்த தேர்வு மூன்று மணி நேரம் நடைபெற்றது மாற்றுத்திறனாளிகளுக்கு அரை மணி நேரம் கூடுதலாக நேரம் ஒதுக்கப்பட்டது

அதனை இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார். இதில்  திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனி சுப்புராயன் மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/