திருப்பத்துார் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குறும்பேறி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போயர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் மற்றும் செல்வராஜ் இருவரும் அரசுக்கு சுகமான இடத்தையும் அதே போல் இன மக்கள் சுடுகாட்டிற்கு சென்று வரும் வழியையும் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் கட்டியுள்ளனர்.
இதன் காரணமாக தங்கள் சுடுகாட்டிற்கு செல்ல வழி இல்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். அதன் காரணமாக மூன்று நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி சரவணன் சபரி, சேட்டு, பிரசாத், ஆகிய நான்கு பேரும் செல்வராஜ் மற்றும் சீனிவாசன் கடைகளை அடித்து நொறுக்கியதாக தெரிகிறது இதன் காரணமாக செல்வராஜ் கொடுத்த புகாரின் காரணமாக திருப்பத்தூர் கிராமிய போலீசார் நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
எனவே இன்று போயர் இன மக்கள் சுமார் 30க்கும் மேற்பட்ட திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் அரசிடத்தை ஆக்கிரமிப்பு செய்வதும் இல்லாமல் போய் புகார் அளித்த சீனிவாசன் மற்றும் செல்வராஜ் மீது நடவடிக்கை எடுக்கவும் மனு அளித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment