திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி, ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றியம், சின்னமோட்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு டி.பாஸ்கர் பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, கோரிக்கை மனுக்களை பெற்று சிறப்புரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் பானு, சத்யாசதீஷ்குமார், கே.சதிஷ்குமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் கலந்து கொண்டார்கள்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment