திருப்பத்தூர் மாவட்ட திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115 வது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலை அமைந்துள்ள அண்ணா சிலை வரை அமைதி ஊர்வலத்தை பொதுத்துறை அமைச்சர் எவ.வேலு அவர்கள் துவக்கி வைத்தார்.
பின்னர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் சென்று அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், ராஜேந்திரன், நகர் மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், வடிவேல், திமுக நிர்வாகிகள் என பலர் கலந்துக்கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment