இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற வில்வநாதன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட கண்காணிப்பாளர் நந்தகோபால், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரிய குமார், மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் மூலம் வழங்கப்படும் நிதியை பொதுத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் அமைச்சர் ஏவ. வேலு வழங்கினார். இதில் பேசிய அமைச்சர் தமிழுக்கு அண்ணா, திமுக வாக்களித்து ஆட்சியில் அமைந்ததால் தான் உரிமை தொகை வழங்கினோம்.
அனைத்துக்கும் தாய் கட்சி நீதி கட்சி. அனைவருக்கும் ஓட்டுரிமை வழங்கியது நீதி கட்சி தான். திராவிட இயக்கம் தான் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பது. பெண்கள் படிப்பு எதற்கு என்றார்கள் ஆனால் திராவிட ஆட்சியில் பெண்களை படி என்றது. ஆனால் அனைத்து துறைகளிலும் பெண்களை கொண்டு வருவதற்கு காரணம் திராவிடம் தான். திராவிட கட்சி ஆட்சியில் பெண்களுக்கு பல்வேறு துறைகளில் இருந்தாலும் திராவிட ஆட்சியில் காவல் துறையில் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
மகளிர் வளர்ச்சியடைய தான் கலைஞரால் உருவாக்கப்பட்டது மகளிர் சுய உதவி குழு ஆரம்பிக்கப்பட்டது. பெண்கள் படும் கஷ்டத்தை பார்த்து தான் முதல்வர் பெண்களுக்கு உரிமை தொகை வழங்கினார். இந்த உரிமை தொகையை பெற்று உங்கள் வாழ்வை உயர்த்தி கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment