திருப்பத்துாரில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. - தமிழக குரல்™ - திருப்பத்தூர்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 29 September 2023

திருப்பத்துாரில் தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அமிர்தா மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் மாநில பொதுக்குழு கூட்டம்  மாநில பொது செயலாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் ஆசிரியர்களின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாத தமிழக அரசுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தேசிய ஆசிரியர் சங்கம் மாநில பொதுக்குழு சார்பில்  16 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. அதில் முக்கிய கோரிக்கைகளாக மருத்துவம் மற்றும் தொழில் கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் இட ஒதுக்கீடு 10% ஆக உயர்த்தப்பட வேண்டும் 


அனைவருக்கும் தரமான சமமான கல்வியை அடையும் வகையில் தேசிய கல்விக் கொள்கையின் நல்ல கூறுகளை தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் கடந்த இரு ஆண்டுகளில் 10 லட்சம் மாணவர்கள் அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு போதிய வகுப்பறையில் உடனடியாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் 1.8.23 மாணவர்கள் எண்ணிக்கைக்கு தக்கவாறு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டு காலமுறை ஊதியத்தில் உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் 


மேலும் தற்காலிக ஆசிரியர் நியமனம் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர் நியமனம் முற்றிலும் நிறுத்தப்பட வேண்டும் என பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழு கூட்டத்தில் மாநிலத் தலைவர் திருலோக சந்திரன் பொருளாளர் திருஞானகுகன் மகளிர் அணி செயலாளர் சாருமதி தேவி மாநிலத் துணைத் தலைவர் விஜய் மற்றும் உறுப்பினர்கள் என 50க்கும் மேற்பட்ட கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை. 

No comments:

Post a Comment

Post Top Ad

*/