சிறப்பு விருந்தினர்களாக வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு பவிஜயகுமார் மற்றும் நமது வட்டார மருத்துவ அலுவலர் சபசுபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள், கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் கல்லூரி துணை முதல்வர் அப்சர் பாஷா சமூக ஆர்வலர் சையது நிசார் அஹமது அப்துல்கலாம் காமராசர் அறக்கட்டளை தலைவர் திருவிஜய் ஆனந்த் அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் நலப்பணி திட்ட அலுவலர் திருஉரமேஷ் கலந்துகொண்டு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளித்தார்.
சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில் மாணவர்கள் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்களாக இருக்க வேண்டும் என்றும் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்று சமூக தொண்டனாக இருக்க வேண்டும் என்று உரையாற்றி பின்னர் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள் மூன்றாண்டு காலம் சிறப்பாக பணியாற்றிய செல்வன் குசஞ்சய் குமார் அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
விழா ஏற்பாட்டினை திட்ட அலுவலர்களான முனைவர்ஜே முகமது அலி மற்றும் முனைவர்முஜிபுர் ரஹ்மான் செய்தனர் முடிவில் முனைவர்ஹரிகரன் அனைவருக்கும் நன்றி கூறினார்
- மாவட்ட செய்தியாளர் மோ அண்ணாமலை
No comments:
Post a Comment