திருப்பத்தூர் மாவட்டத்தில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் முகாம் நடைப்பெற்றது. முகாமில் கலந்துக் கொண்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.
இந்த முகாமில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டனர். பின்னர் மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உணவு வழங்கினார் அதனைத் தொடர்ந்து அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார், இந்த நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன், மாவட்ட மன நல மருத்துவர் பிரபாவராணி, திருப்பத்துார் மாவட்ட கண் மருத்துவர் பாரான் சௌத் மற்றும் காது மூக்கு தொண்டை மருத்துவர் தன்விர்அகமத் முட நீக்கு வல்லுனர் இனியன் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment