திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் வட்டாரத்திற்குட்பட்ட வலையாம்பட்டு ஊராட்சி, காமராஜ் நகர் பகுதியில் திருப்பத்தூர் துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு. த.ரா.செந்தில் MBBS DPH MPH அவர்களின் வழிகாட்டுதலின்படி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ச பசுபதி MD அவர்கள் தலைமையில் சிறப்பு காய்ச்சல் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
இம்முகாமினை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் திருமிகு. தெ. பாஸ்கர பாண்டியன் IAS அவர்கள் நேரில் ஆய்வு செய்தார்கள். உடன் மருத்துவ அலுவலர் அருள் பிரசாத், வலையாம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் திருப்பதி, ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர், வருவாய் துறை, ஊராட்சித் துறை அலுவலர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் உள்ளிட்ட சுகாதார துறை அலுவலர்கள் , கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment