திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நாம் தமிழர் கட்சி சார்பாக காவிரி நதி நீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக மாநிலத்தையும் அங்கு ஆளும் கட்சியான காங்கிரஸ் அரசையும் அதே போல் மத்திய அரசையும் கண்டித்து மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசையும் கர்நாடகா அரசையும் கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர், மேலும் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்தால் தமிழ்நாட்டில் உள்ள நெய்வேலி கூடங்குளம், கல்பாக்கம், உற்பத்தியாகும் மின்சாரத்தை நிறுத்த நாம் தமிழர் கட்சி போராடும் எனவும் தெரிவித்தனர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் நான்கு வயதுக்கு குறைவான குழந்தைகள் கலந்து கொண்டு கண்டன பதாகைகளை கையில் வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அனைவரையும் கவர்ந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை
No comments:
Post a Comment