திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்பில் தூய்மையே சேவை என்ற திட்டத்தின் கீழ் குப்பையில்லா இந்தியா என்ற நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தூய்மை பணியை துவக்கி வைத்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயகுமாரி, நகர்மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன், துணை தலைவர் சபியுல்லா மற்றும் நகராட்சி ஆணையர் மற்றும் தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்..
- மாவட்ட செய்தியாளர் மோ. அண்ணாமலை.
No comments:
Post a Comment